எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரனும் சசிகலாவும் தான் என குறிப்பிட்டவர்,  இவர்கள் இல்லை என்றால் இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாய் இருக்கும் என வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வரும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கடந்த வாரம் சந்தித்தனர். அப்போது இருவரும் ஒன்றினைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.

இதனை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஓட்டகம் புகுந்ததைப் போன்றது என தெரிவித்தார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

அட பொசுக்குன்னு! ஓபிஎஸ்-ஐ பார்த்து இபிஎஸ் இப்படி சொல்லிட்டாரே! ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டத்தில் ஆவேச பேச்சு..!

எடப்பாடிக்கு தகுதி இல்லை

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் .ஓபிஎஸ் சந்திப்பை விமர்சனம் செய்யும் தகுதி இல்லாதவர் என தெரிவித்தார். இபிஎஸ்ஐ முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரனும் சசிகலாவும் தான் என குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருக்க உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ் என குறிப்பிட்டார். இவர்கள் இல்லை என்றால் இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாய் இருக்கும் என்றும் நன்றி இல்லாமல் பேசி வருகிறார் என வைத்தியலிங்கம் குற்றம் சாட்டினார். மேலும் ஆயிரம் எடப்பாடிகள் வந்தாலும் அதிமுகவே வழி நடத்த முடியாது என்றும் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் உடன் மோதலா..! டிடிவி தினகரனை சந்தித்ததில் எனக்கு விருப்பம் இல்லையா.? இபிஎஸ்யை விளாசும் வைத்தியலிங்கம்