கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால், அவர் மீது மதிப்பு வைத்திருந்த ஜெயலலிதா அவரை மாநிலங்களவை எம்பி ஆக்கினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் கொடுத்தார். 

இந்த அளவுக்கு முக்கிய நபராக இருந்த அனுபவம் மிக்கவர் வைத்தியலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்பும் அதிமுக உடைந்து மீண்டும் சேர்ந்தபோது ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அடுத்தபடியாக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பைப் பெற்றார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக எம்பி வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். வைத்திலிங்கத்திற்கு மத்திய அமைச்சர்  பதவி கேட்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்க மோடி முடிவு செய்துள்ளதால், அது ஓபிஎஸ் மகனுக்காக?  அல்லது வைத்திலிங்கத்துக்கா? என அதிமுக தொண்டர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த, அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி டெல்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.