காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடகாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா சார்பில் மத்திய அரசுக்கு அந்தந்த மாநிலங்களின் நிலைப்பாடுகளுக்கு தகுந்தபடி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. காவிரி விவகாரத்தில் எதிரெதிர் நிலைப்பாட்டை தமிழகமும் கர்நாடகமும் கொண்டுள்ளதால், பிரச்னை நீடித்து வருகிறது.

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆளுநர் நியமித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததற்கு தமிழக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழர்களின் தன்மானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது என ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கவிஞர் வைரமுத்துவும் டுவீட் செய்துள்ளார். அதில், இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை?

இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான்
ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை.
துணைவேந்தர் பதவிக்குமா
ஒரு தமிழருக்குத் தகுதியில்லை?
இதுபோன்ற செயல்களெல்லாம்
தமிழகத்தைத்
தனிமைப்படுத்தவா?
தனிப்படுத்தவா?#AnnaUniversity #ViceChancellor
— வைரமுத்து (@vairamuthu) April 6, 2018

இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா? என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.