மதிமுக  பொதுச் செயலாளா் வைகோவை தேசதுரோக வழக்கில் கைது செய்து  அவரை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக  தேசிய செயலாளா் ஹெச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கக் வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடுமையான  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம்  சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டங்கள் நடைபெற்றன.

Go back Modi  என்ற சொல் சமூக வலைதளங்களில் உலக அளவில் ட்ரேண்ட் ஆனது. மோடிக்கு எதிராக இது வரை  இந்த அளவுக்கு எதிர்ப்பு வந்ததில்லை எனும் அளவுக்கு போராட்டம் கடுமையாக இருந்தது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று நடைபெற்ற  போராட்டத்தால் போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டன.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பா.ஜ.க. தேசிய செயலாளா் எச்.ராஜா .காவிரி விவகாரம் என்று கூறி  ஐபிஎல் . போட்டியை பார்க்க வந்தவர்களை உடைகளை அகற்ற சொல்வது ரௌடித்தனம் என குறிப்பிட்டார்.

சீமானுடன் சோ்த்து பாரதிராஜா, வைரமுத்து, அமீா், கௌதமன் போன்றவா்களையும் கைது செய்ய வேண்டும். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 750 பேரும் தேசதுரோகிகள். இவா்கள் அனைவரையும் கைது செய்தால் மட்டும் போதும் நாடு வளமாகிவிடும் என்றும் அவர் கூறினார்

தமிழக நலனுக்காகவும், இளைஞா்களின் வேலை வாய்ப்புக்காகவும் தொடங்கப்படடது தான் ராணுவ கண்காட்சி. தமிழகத்தின் மீதும் இளைஞா்களின் மீதும் அக்கறை இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பிரதமரை வரவேற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்ட எச்.ராஜா தமிழகத்தின் மீது  அவருக்கு சிறிதும் அக்கறை இல்லை என கூறினார்.

இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிப்போம் என்று கூறும் வைகோ தான் இந்தியாவின் முதல் தேசதுரோகி. அவரை தேசதுரோக வழக்கில் கைது செய்து சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறிய எர்.ராஜா அவர் உயிர் ஜெயிலில்தான் பிரிய வேண்டும் என்றும் மிகக் கடுமையாக குறிப்பிட்டார்.