கடும் வறட்சி நிலவிய நிலையில் விவசாயிகள் உயிரிழந்து வருகிற நிலையில் இன்று மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ முதலமைச்சரின் சமயோசித்த புத்தியால் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். 

முதலமைச்சரின் சமயோசித்த புத்தியால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இப்போது பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நான் அதிகாரிகளை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். கலிங்கப்பட்டி கிராம குருவிக்குளம் ஒன்றியம் மூலம் எனக்கு வந்துள்ள கடிதம். 

வங்கிக்கணக்கில் நிவாரணம் கிடைத்தால் நன்றாக இருக்கும் . தற்போது கிராம நிர்வாக அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கி விட்டார்கள் . பாதிக்கப்பட்ட விவசாயிகள் , இறந்து போன குடும்பத்திற்கு கூட 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று நான் வாதாட வில்லை. அதிக பட்சம் எவ்வளவு கொடுக்க முடியும். எப்போது கொடுக்க முடியும். பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். என்பதை அறிவியுங்கள்

ஏறு தழுவுதல் , வாடி வாசல் என்பதை இங்குள்ளவர்கள் மறக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டு எவ்வளவு வறுமையில் இருந்தாலும் , அவன் பட்டினி கிடந்தால் கூட பிள்ளையை பார்க்கிற மாதிரி பார்த்துகொள்கிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜட்ஜ்மெண்டு தப்பா போய் உயிரே போன ஜட்ஜ் இருக்கிறான். அவன் பேரு நெடுஞ்செழியன் . அப்பேற்ப்பட்ட மன்னன் நெடுஞ்செழியன். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் . அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.