பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள்  ஜனநாயகத்தை கெடுக்கும் போது தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் சரியான முறையில் செயல்படுகிறார் என்றும், ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ன வேலையை செய்ய வேண்டுமோ அதை அவர்  சரியாக செய்துகொண்டு இருக்கிறார் என்றும் வைகோ தெரிவித்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களை எல்லாம் பாஜக அழித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து மீத்தேன் கியாஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவுக்கு லட்சோப லட்சம் கோடி  வருமானத்துக்காக தமிழகத்தை பாழ்படுத்த  திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அரசு  ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்து வருகிறது என்றும், இதன் வெளிப்பாடே  திருமுருகன் காந்தி, ஜெயராமன் ஆகியோரை சிறையில் அடைத்தும்,  மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவியும் வருவதாக குற்றம்சாட்டினார்.