Asianet News TamilAsianet News Tamil

எம்.பி.யாக நான் வாங்கும் சம்பளத்தை என்ன செய்யப் போறேன் தெரியுமா ? வைகோவின் அதிரடி முடிவு !!

தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மதிமக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி.யாக தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் கட்சிக்கு கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். 
 

vaiko salary will be credited in MDMK account
Author
Chennai, First Published Jul 9, 2019, 11:09 PM IST

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது திமுக - மதிமுக இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை எம்.பி.பதவி  வைகோவுக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு தேச துரோக வழக்கில் ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் வைகோ தேர்தலில் நிற்க முடியாக சூழல் ஏற்பட்டது.

vaiko salary will be credited in MDMK account

இதையடுத்து அவருக்குப் பதிலாக திமுகவைசச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் வேட்புமனுவை பரிசீலித்தபோது  வைகோவின் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனவே வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி கலக்கப் போவது  உறுதியாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் வைகோவின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்கப்போவதால் அவரது கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

vaiko salary will be credited in MDMK account
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தனது ராஜ்யசபா எம்பி சம்பளம் முழுவதையும் தனது கட்சியின் கணக்கில் வரவு வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

vaiko salary will be credited in MDMK account

மேலும் எந்தப் பதவியையும் தான் எதிர்பார்த்து இருந்தது இல்லை என்றும், தனது கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தை தான் ஒரு கோவிலாக, மசூதியாக, தேவாலயமாக, கருதுவதாகவும், தன்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு கட்சிக்காக உழைப்பேன் என்றும் வைகோ  கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios