தினகரனுக்காக லட்சங்களை அள்ளிக் கரைத்த வைகோவின் தம்பி...! புரட்சிப் புயலை வறுத்தெடுக்கும் ஸ்டாலின்..!
அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நிரந்தர நண்பருமில்லை!’ என்று ஒரு ரெடிமேடு பதிலை வைத்துள்ளனர். இதை வைத்துக் கொண்டு எந்தக் கட்சியும் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொண்டு பதவி மற்றும் பல வகை ஆதாயங்களைப் பெறுவதும்! ஏதாவது பிரச்னை என்றால் பிரிந்து நின்று மிக மிக மோசமான முறையில் பரஸ்பரம் திட்டிக் கொள்வதும் காலங்காலமாக நடக்கும் வழக்கம்.
’அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நிரந்தர நண்பருமில்லை!’ என்று ஒரு ரெடிமேடு பதிலை வைத்துள்ளனர். இதை வைத்துக் கொண்டு எந்தக் கட்சியும் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொண்டு பதவி மற்றும் பல வகை ஆதாயங்களைப் பெறுவதும்! ஏதாவது பிரச்னை என்றால் பிரிந்து நின்று மிக மிக மோசமான முறையில் பரஸ்பரம் திட்டிக் கொள்வதும் காலங்காலமாக நடக்கும் வழக்கம்.
அதேபோல் அரசியல் பிரமுகர்களின் சொந்தங்கள் யாரோடு நட்பு பாராட்டுகிறார்கள்!? என்பதே புதிராகத்தான் இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவரானவர் சில கட்சிகளுக்கு எதிரியாக இருக்கும் நிலையில், அவரது உறவினர்களோ எதிர் தரப்பினரோடு நட்பு பாராட்டுவதும் சகஜமாகி இருக்கிறது. இதற்கான லேட்டஸ் உதாரணம்தான் டி.டி.வி. தினகரனுக்கு, வைகோவின் தம்பி தன் சொந்த செலவில் உதவிய கதை. இது ம.தி.மு.க. இப்போது தங்கியிருக்கும் தி.மு.க. கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குப் போக, மனுஷன் செம்ம டென்ஷனாகிவிட்டாராம்.
அப்படி என்ன செய்துவிட்டார் வைகோவின் தம்பி? அரசியல் பார்வையாளர்கள் இதுபற்றி சொல்வது இதுதான்....”ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வான தினகரனுக்கு அந்த ஒரு தொகுதி தேர்தல் வெற்றியை தவிர அதன் பின் எந்த முன்னேற்றமும் இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்! எனும் கட்சியை துவக்கி, அரசியல் சரிவுகளை சந்திச்ச பிறகு மிகப்பெரிய நிர்வாகிகள் அத்தனை பேரும் அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் இன்னும் ஒருடத்தில் தேர்தல் வர இருக்கிறது தமிழக சட்டசபைக்கு. மேலும், சசிகலாவும் அடுத்த வருடம் சிறையிலிருந்து விடுதலையாகிடுவார்.
இதற்குள் மீண்டும் அரசியல் எழுச்சி பெற நினைக்கிறார் தினகரன். இதற்காக சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தனது கட்சி சார்பாக பெரிய அளவில் கொண்டாடினார் டி.டி.வி. அப்போது இந்த நிகழ்வுக்காக அவர் கட்சியினர் அனுமதி கேட்ட நான்கு இடங்களையும் போலீஸ் ரிஜெக்ட் செய்து விட்டது. விளைவு, அ.ம.மு.க.வின் தென்மண்டல பொறுப்பாளரான மாணிக்கராஜா, நெல்லை பக்கம் கங்கைகொண்டான் அருகே 27 ஏக்கர் நிலத்தினை கோர்ட்டுக்கு சென்று அனுமதி வாங்கினார்.
இங்கேதான் வருகிறது ட்விஸ்ட். அதாவது இந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் வைகோவின் தம்பியான வை.ரவிச்சந்திரனின் இடம் இருக்கிறது. தினகரனின் விழாவுக்கு வரும் வாகனங்களை இங்கே நிறுத்திட அனுமதி கேட்டிருக்கிறார்கள். ‘ரவிச்சந்திரனோட அண்ணன் வைகோ தி.மு.க. கூட்டணியின் முக்கிய தலைவர். நமக்கு இந்த இடம் கிடைக்குமா?’ என்று அவர்கள் யோசித்திருக்கின்றனர். ஆனால் ரவிச்சந்திரனோ தனது சொந்த செலவில் தன்னுடைய நிலத்தை சீர் செய்து கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் தினகரனுக்கு போக, அவருக்கு இன்ப அதிர்ச்சியாகிடுச்சு.
விஷம் தெரிஞ்ச நெல்லை மாவட்ட தி.மு.க. முக்கிய புள்ளிகள் டென்ஷனாயிட்டாங்க. ‘போன தடவை சட்டசபை தேர்தல்ல மக்கள் நல கூட்டணின்னு ஒன்றை வெச்சுக்கிட்டு நம்மளோட வெற்றியை கெடுத்தாரு வைகோ. ஆனா இப்ப நம்மகிட்ட வந்து சேர்ந்து, ரெண்டு எம்.பி. பதவிகளை வாங்கிட்டார். ஆனால் இப்பவும் கூட அவரோட ரத்த உறவான சொந்த தம்பியோ இப்படி நம்மோட எதிரி கட்சி விழாவுக்கு தன் சொந்த செலவில் நிலத்தை தயார் பண்ணி கொடுத்திருக்கிறார் தளபதி! நிலத்தை சரி பண்றதுக்காக சில லட்சங்கள் நிச்சயம் காலியாகியிருக்கும். எதிர்க்கட்சிக்காரங்களுக்கு இப்படி பணத்தை அள்ளிவிட்டு, அண்ட்கோ பிடிக்க வேண்டிய அவசியமென்ன? அண்ணனோட சம்மதம் இல்லாமலா, அவருக்கு தெரியாமலா இந்த காரியத்தை பண்ணியிருப்பார் ரவிச்சந்திரன்? வைகோ இன்னும் மாறலை, இனியும் நம்ம கூட்டணியில் அவர் இருக்கணுமா?’ என்று ஸ்டாலின் வரை புகாரை கொண்டுபோய் விட்டனர்.
புகாரை வாசித்த ஸ்டாலினுக்கு பிரஷர் ஏறிடுச்சாம். அவர் வைகோவிடமே இது பற்றி விளக்கம் கேட்டிருக்கிறார். அதுக்கு வைகோவின் ரியாக்ஷன் என்னான்னு தெரியலை. எது எப்படியோ இந்த விவகாரம் தி.மு.க. கூட்டணியில் வைகோவுக்கு புது சிக்கலை உருவாக்கி இருக்குது.” என்று முடித்தனர். ஆனால் ம.தி.மு.க. தரப்போ, ‘ரவிச்சந்திரன் எந்த தப்பும் பண்ணலை. சும்மா ஒரு வதந்திக்கு பூச்சூடி, பொட்டு வெச்சு அழகு பாக்குறாங்க சிலர்.’ என்கிறார்கள். உண்மை எது, வதந்தி எதுன்னு ஸ்டாலின் விசாரிச்சா தெரிஞ்சுட போகுது!