Asianet News TamilAsianet News Tamil

"அப்துல் கலாம் பக்கத்தில் எதற்கு பகவத் கீதை?" - வைகோ சரமாரி கேள்வி!!

vaiko questions about abdul kalam memorial
vaiko questions about abdul kalam memorial
Author
First Published Jul 29, 2017, 11:35 AM IST


அப்துல் கலாமுக்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்வு உள்ளழ என்றும், அவரது சிலையின் கரங்களில் திருக்குறள் புத்தகத்தை வைக்காமல் ஏன் பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு கடந்த 27 ஆம் தேதி மோடி அதை திறந்து வைத்தார். அந்த மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலையில் உள்ள அவரது கரத்தில் பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அப்துல் கலாமுக்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினார்.

vaiko questions about abdul kalam memorial

அபதுல் கலாமின் கரங்களில் திருக்குறள் புத்தகத்தை வைத்திருக்கலாமே என கேள்வி எழுப்பிய வைகோ, திருக்குறளை விட பகவத் கீதை பெரியதா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.மத்திய அரசின் இந்த நடவடிக்கை மதப் பிரச்சனையைத் தூண்டும் எனவும் வைகோ தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மீத்தேன் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது எனவும் தெரிவித்தார்.

வேளாண் மண்டலமாக மாற்றப்பட வேண்டிய நாகை, கடலூர் மாவட்டங்களை, பெட்ரோலிய மண்டலங்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வைகோ குற்றம்சாட்டினார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios