Vaiko has urged the federal government to withdraw the law setting up the National Medical Authority.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ கவுன்சிலை அமைப்பதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழக்கியது. இந்த புதிய ஆணையத்தின்மூலம் 4 தன்னாட்சி வாரியங்களை அமைத்து இளங்கலை, முதுநிலை பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு, மருத்துவர்கள் பதிவீடு போன்றவற்றை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ரவீந்திரநாத், வெளிநாட்டு மருத்துவர்களை இந்தியாவுக்கு வரவழைப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் மருத்துவ தொழில் வியாபாரமானதற்கு மத்திய அரசே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் ஆதிக்கத்தை நிலைநாட்ட தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்குவதாகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிக்க வழி ஏற்படும் எனவும் குற்றம் சாட்டினார்.
