காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். எப்படியும் அவரை சென்னைக்கு அழைத்துவந்து மாநாடு நடத்துவேன் என்று அவர் கூறி வந்த நிலையில் இந் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மற்றும் முதியிகவின் மாநில மாநாடு சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள  ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருவந்துள்ளது. அவர்கள் யாருடனும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது குறித்து பேசிய மதிமுக கட்சினர்,  வீட்டுச் சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவை  எப்படியேனும் மாநாட்டிற்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்பதில் வைகோ உறுதியாக உள்ளார். அத்துடன் தேசிய அளவில் உள்ள  காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட கட்சித்தலைவர்களே கூட முயற்ச்சி செய்தும் பரூக் அப்துல்லா உள்ளிட்ட எந்த ஒரு காஷ்மீர் அரசியல் தலைவர்களையும் சந்திக்க முடியவில்லை இந்த நிலையில் தாம் அதை சாதிக்க வேண்டும் என்பதில் வைகோ குறியாக உள்ளார் என தெரிவித்தனர்.

 ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்திற்காக குரல் கொடுத்து ஓய்ந்துவிட்ட நிலையில் தற்போது வைகை காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.