23 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ ராஜ்யசபா எம்.பியாகி நாடாளிமன்றத்திற்கு செல்ல இருக்கிறார்.

வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதென்று நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க உறுதியளித்து இருந்தது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி-யாக வைகோ தேர்வுசெய்யப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எம்.பி-யாக டெல்லிக்கு வைகோ செல்வது உறுதியாகியுள்ளது. 

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் ராஜ்யசபா, தொமுச பொதுச்செயலாளர் கே.சண்முகம் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தை மதிமுகவுக்கு ஒதுக்கியது. இதன் மூலம் வைகோ மீண்டும் எம்பியாகி நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க இருக்கிறார்.