தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான எதிர்ப்பைப் போலவே நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழக அளவில் கடும் எதிர்ப்புகள் நிலவுகின்றன.

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் வைகோ தொடங்கினார். இந்த பயணத்தை ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த நடைப்பயணம் தொடங்கும் முன்பாக ரவி என்ற மதிமுக தொண்டர் தீக்குளித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரவியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, மேடையில் பேசிய வைகோ கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று ரவியை வைகோ சந்தித்து பேசினார்.

அப்போது, நடந்த உரையாடல் கலங்க வைக்கும்படி உள்ளது. 

இப்படி செய்துவிட்டாயேப்பா.. என வைகோ கேட்க, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நீங்க(வைகோ) கடுமையாக போராடுறீங்க.. என்னால் இப்படித்தான் எதிர்ப்பை காட்ட முடிந்தது என்றார் ரவி.

மனைவி, குழந்தைகள், என்னை பற்றியெல்லாம் யோசித்து பார்த்தாயா? உன் மனைவி, குழந்தைகளுக்கு என்னப்பா பதில் சொல்வேன்? என கேட்ட வைகோ, கண்ணீர் விட்டு கதறினார்.

இந்த சம்பவம் கலங்க வைக்கும்படி அமைந்தது.