Asianet News TamilAsianet News Tamil

அவர் வருவாரு... சுற்றுப்பயணமும் செய்வாரு... வைகோவின் சவாலை ஏற்ற பொன்னார்...!

பிரதமர் மோடி தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்க தயார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

vaiko challenge...pon radhakrishnan accept
Author
Tamil Nadu, First Published Dec 4, 2018, 1:17 PM IST

பிரதமர் மோடி தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்க தயார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு எதிராக நடத்தப்பட்டதை கண்டித்து திமுகவில் இருந்து வெளியேறினார். எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் களத்தில் இறங்கி உள்ளார். வைகோ மீதான நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியதாகவும மாற்றி உள்ளது என்றார்.vaiko challenge...pon radhakrishnan accept

பிரதமர் தமிழகத்துக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என கூறியிருக்கிறார். யாரையோ திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காகவும் சொல்லி உள்ளார். ஆனால் அவர் எதற்காக சொல்லியிருந்தாலும் இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் தமிழகத்திற்கு வருவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் வழங்குவார். அவர்கள் எந்த விதமான போராட்டங்களை நடத்துவதாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். vaiko challenge...pon radhakrishnan accept

தேவையற்ற முறையில் வார்த்தைகளை கடக்க வேண்டாம் எனவும் வைகோவுக்கு அறிவுறுத்தியுள்ளார். யாரையோ திருப்திபடுத்த, யாரையாவது அவமானப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். வேண்டா விருந்தாளியாக திமுகவில் எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வைகோ நினைக்கிறார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அணை கட்டுவதற்கு முழு எதிர்ப்பை நான் தெரிவித்து வருகிறேன் என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios