டிசம்பர் 16ஆம் தேதி கலைஞர் சிலை திறப்பு விழாவிலும், பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்ட வைகோ அதையடுத்து விமானத்தில் கேரள மாநிலம் கோழிகோடு புறப்பட்டார். 17ஆம் தேதி காலை கோழிக்கோட்டில் இருந்து காரில் புறப்பட்டு கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்குச் சென்றார். வைகோவுடன் அவரது மனைவியும் அங்கே சென்றிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதத்துக்குள் வர இருக்கிறது. பிப்ரவரி மாதத்திலிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். இம்முறை தேர்தல் களத்தின் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பார் வைகோ என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். 

பிரசாரம் தொடங்கும் நேரத்தில் கோடை வெய்யில் தொடக்கம் என்பதால், உடல்நலனை மேம்படுத்திக் கொள்ளவும், புத்துணர்ச்சிக்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் வருடந்தோறும் எடுத்துக் கொள்ளும் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்குச் சென்றிருக்கிறார். அங்கு 13 நாட்களுக்கு தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்பு அங்கிருந்து டிசம்பர் 31ஆம் தேதி புறப்பட்டு சென்னை வருகிறார்.