Asianet News TamilAsianet News Tamil

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ்தான் துரோகி... நாடாளுமன்றத்தைத் திடுக்கிட வைத்த வைகோ..!

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தான் துரோகி என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான வைகோ அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். 
Vaiko accuses Congress of Kashmir affair
Author
Tamil Nadu, First Published Aug 5, 2019, 5:27 PM IST

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தான் துரோகி என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான வைகோ அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

 Vaiko accuses Congress of Kashmir affair

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்கியது தொடர்பான விவாதாம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியல் அமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல். இந்திராகாந்தி அரசுக்கு பிறகு மத்திய அரசு மீண்டும் எமெர்ஜென்சியை கொண்டு வருகிறது. பாஜக காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலையில் ஈடுப்பட்டுள்ளது. 
காஷ்மீர் மக்களுக்கு நேரு அளித்த வாக்குறுதியை மீறி இருக்கிறது மத்திய அரசு. காஷ்மீருக்கு நாம் கொடுத்த சத்தியத்தை மீறி இருக்கிறோம். அப்பகுதி மக்களை நாம் ஏமாற்றி இருக்கிறோம். இதை பார்க்கும் போது என் இரத்தம் கொதிக்கிறது. ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியலமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல். Vaiko accuses Congress of Kashmir affair

காஷ்மீரை பாதுகாக்க கார்கில் யுத்தத்தில் தமிழக இளைஞர்கள் ரத்தம் சிந்தினர். ஆனால் இன்று தமிழர்கள் உட்பட காஷ்மீர் மக்களின் உணர்வை ஓட்டுமொத்தமாக மத்திய அரசு புண்படுத்திவிட்டது. இந்த விவகாரத்தை எதிர்க்காதவர்களும் துரோகிகளே. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தான் துரோகி’’ என அவர் பேசினார்.

 Vaiko accuses Congress of Kashmir affair

காங்கிரஸ் கூட்டணியுடன் மக்களவை தேர்தலில் இணைந்து இருந்தது மதிமுக. பாஜகவை கடுமையாக விமர்சித்து, வந்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை துரோகி என கூறியிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios