தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகின்றது. புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியது.

இந்நிலையில் தற்போது வைத்திலிங்கம் அவரது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக துணை சபாநாயகருக்கு கடிதம் அளித்துள்ளார். ஆகவே அவர் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.