uttarakhand election results
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாரதியஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாரதியஜனதா கட்சி 56 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதேசமயம், ஆளும் கட்சியான முதல்வர் ஹரிஸ்ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடும் பின்னடைவைச் சந்தித்து வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.
மலைப்பகுதிகளைக் கொண்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின் அங்கு பாரதியஜனதா ஆட்சிக்கு இப்போது வர வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதற்கு ஏற்றார்போல் அந்த கட்சி தொடர்ந்து அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுவருகிறது.

அந்த மாநிலத்தின் நட்சத்திர தொகுகுதிகளான சக்ரத்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிதாம் பவார் 965 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதேசமயம், தார்ச்சுலா, ருத்ராபூர் தொகுதிக|ளில் பாரதியஜனதா முன்னிலை பெற்று வருகிறது.

தனிப்பெரும்பான்மையுடன் பாரதியஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் அங்கு பாஜனதா தொண்டர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
