Asianet News TamilAsianet News Tamil

"திருநீறை டால்கம் பவுடர் போன்றா பயன்படுத்துவது?" மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

கொள்கையை விட்டுக் கொடுக்காத பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், கொள்கையே இல்லாத ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். 

Using Talcum Powder? Annamalai who bleached MK Stalin ..!
Author
Tamil nadu, First Published Nov 2, 2020, 10:59 AM IST

பசும்பொன் முத்துராமலிங் தேவர் 113வது ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அன்றைய தினத்தில் அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என கூறிய தேவரின் குருபூஜைக்கு தேசியமும், தெய்வீகமும் பிடிக்காத ஸ்டாலின் செல்வது ஏன் என்ற விமர்சனமும் எழுந்தது.Using Talcum Powder? Annamalai who bleached MK Stalin ..!

அதனையும் மீறி சென்ற ஸ்டாலின் தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் வெறுமனே கழுத்தில் தடவி கொண்டு மீதம் இருந்த விபூதியை தரையில் கொட்டினார். இந்த செயல் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் பரவியது. இந்து மத புனித அடையாளமான விபூதியை அவமதித்ததால் இந்து சமுதாய மக்களை ஸ்டாலின் மீண்டும் அவமதித்ததாக இந்து மக்கள் ஆவேசப்பட்டனர்.Using Talcum Powder? Annamalai who bleached MK Stalin ..!

 இது தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவில் அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்துவது போலநடந்துகொண்டார். திருநீறை டால்கம்பவுடர் போல பயன்படுத்தியுள்ளார். பா.ஜ.க இதை வன்மையாக கண்டிக்கிறது. கொள்கையை விட்டுக் கொடுக்காத பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், கொள்கையே இல்லாத ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். இச்சம்பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக ஸ்டாலின் இவ்வாறு நடந்து கொள்கிறார்" என ஸ்டாலினை விமர்சித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios