தமிழக பட்ஜெட் நிறைவு பெற்ற உடன் ஏப்ரல் மாதம் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக  ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதிதாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியான திமுக கூட்டணி கூடுதலாக வெற்றி பெற்றது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரகப் பகுதி தேர்தல் மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்தப் பகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதையும் படிங்க;-  அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

இதனிடையே, வரும் வெள்ளிக்கிழமை 14-ம் தேதி தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அது தொடர்பான விவாதம் அடுத்தவாரம் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறகிறது. அதற்கு பிறகு தொடங்கும் துறை ரீதியான மானியக் கோரிக்கை வரும் மார்ச் மாதம் 20-ம் தேதிக்கு மேல் முடிவடைய உள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இதையும் படிங்க;-  ஆபாச வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொன்ன மனைவி... காமவெறியால் பலரிடம் உல்லாசம்.. அதிர்ந்துபோன கணவர்..!

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று முதல் 4 நாட்கள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி முதல்வர் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரலில் தேர்தல் என்பதால் நிர்வாகிகள் தயாராக இருக்க முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சியுடன் தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளது.