திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் அதிமுக எம்எல்ஏவான குமரகுருவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏவாகவும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் குமரகுரு இருந்து வருகிறார். இவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அலறியடித்த குடும்பத்தினர் உடனே விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக எம்எல்ஏ குமரகுரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த அவரது ஆதரவாளர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எம்எல்ஏ குமரகுரு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.