இது நாள் வரை செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் தற்போது திமுகவிற்கு தலைவராக மாறி இருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும் பலர் வாரிசு அரசியல் என்று இதனை கூறினாலும் ஸ்டாலின் இந்த தலைவர் பதவியை அடைந்திட கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. 

ஒரு சாதாரண தொண்டனாக திமுகவிற்கு டன் பங்களிப்பினை தொடங்கிய ஸ்டாலின் இன்று தலைவர் எனும் பதவியை அடையும் வரை ஓடி இருக்கும் அரசியல் ஓட்டம் கொஞ்சம் நீளமானது தான். கலைஞருக்கு மூன்றாவது மகனாக பிறந்த இவர் எல்லா விதத்திலுமே கொஞ்சம் சிறப்பு தன்மைகள் வாய்ந்தவர் தான். 

பொதுவாக கலைஞரின் குடும்பத்தில் எல்லா நபர்களின் பெயருமே தூய தமிழ் பெயராக தான் இருக்கும் ஆனால் ஸ்டாலினின் பெயர் மட்டும் அப்படி இருக்காது. முதலில் ஸ்டாலினுக்கு கலைஞரு சூட்ட இருந்த பெயர் அய்யா துரை என்பது தான். இந்த பெயரை சூட்ட கலைஞர் விரும்பியதற்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. 

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததையடுத்து திமுக தலைவர் பதவிக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திமுக வின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் தளபதி  மு.க.ஸ்டாலின் கடந்துவந்த அரசியல் பயணம் சாதாரணமானதல்ல பல சவால்களும் சோதனைகளும் நிறைந்தவை.

தந்தை பெரியாருக்கு அய்யா என செல்ல பெயர் உண்டு அந்த பெயரையும், அண்ணாதுரையில் இருந்து துரை என்பதையும் எடுத்து அய்யாதுரை என்று பெயரிட நினைத்திருக்கிறார் கலைஞர். ஆனால் ஒரு சமயம் ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலினின் மரணத்தை அடுத்து நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் அவரை பற்றி சிலாகித்து கலைஞர் பேசி கொண்டிருந்திருக்கிறார். 

அப்போது தான் அவருக்கு மகன் பிறந்ததாக செய்தி வந்திருக்கிறது. உடனே அவர் அந்த இடத்தில் வைத்தே தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டி இருக்கிறார். இவ்வாறு பிறந்த தினத்தன்றே அவரின் வாழ்க்கை பயணத்தை புரட்சியாளர் ஸ்டாலினின் வழியில் துவங்கி இருக்கிறார் ஸ்டாலின். புரட்சியாளரும் போராளியுமான ஜோசஃப் ஸ்டாலினை போலவே தான் ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும் இருந்திருக்கிறது. 

அதற்கு பின் வரும் சம்பவமே ஒரு நல்ல உதாரணம் என்று கூறலாம். ஸ்டாலினை கலைஞர் பள்ளியில் சேர்க்க முயன்ற போது அவரது பெயரை காரணம் காட்டி சேர்க்க மறுத்திருக்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர். புரட்சியாளரின் பெயரை வைத்திருக்கிறீர்கள். இந்த பெயரை வேண்டுமானால் மாற்றி விட்டு வாருங்கள் இங்கே சேர்த்து கொள்கிறோம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

பெயரை மாற்ற மறுத்த கலைஞர் பள்ளியை மாற்றி இருக்கிறார். அதன் பிறகு சென்னை கிறுஸ்தவ கல்லூரியில் இருந்த பள்ளியில் தன் பள்ளி படிப்பை முடித்த ஸ்டாலின் பள்ளி மாணவனாக இருந்த போதே அரசியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.

1968 ஆம் ஆண்டில் கோபலபுரத்தில் உள்ள அரசியல் ஆர்வம் மிகுந்த இளைஞர்களுடன் இணைந்து  இளைஞர் திமுக எனும் அமைப்பினை ஆரம்பித்த ஸ்டாலின் அந்த அமைப்பின் மூலம் அப்பகுதி மக்களுக்கு தொண்டாற்றி இருக்கிறார்.
அப்போது அவர் போட்ட பிள்ளையர் சுழி தான், 1980ல் திமுக அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த இளைஞரணியில் அவரை அமைப்பாள ஆக்கியது.

அடுத்து நடந்தது என்ன? பார்ட் 2 வில் பார்க்கலாம்!