இந்த ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார். ''மத்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் வகையில் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு வரவேண்டும், வீட்டிலிருந்தே பணி செய்யவதை தவிர்க்க வேண்டும். மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.

அனைத்து அமைச்சர்களும் காலை 9.30 மணிக்கே அலுவலகத்திற்கு வர வேண்டும். வீட்டில் இருந்தே பணி செய்வதை தவிர்த்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும்,நாடாளுமன்ற  கூட்டத்தொடர் நடைபெறும் 40 நாட்களும் எந்த அமைச்சரும் வேறு இடங்களுக்கு பயணம் செலவதை தவிர்க்க வேண்டும்.  மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் வகையில் மத்திய அமைச்சர்கள் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு வரவேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கும் வகையில் கேபினட் அமைச்சர்கள் முக்கிய கோப்புகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், இதன்மூலம் வேலைத்திறன் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். அமைச்சர்கள் அலுவலத்திற்கு வருவதுடன் அவ்வப்போது கட்சி எம்பிக்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவேண்டும் எனவும் மோடி அறிவுறுத்தினார்.

அதேபோல், அந்தந்த தொகுதி எம்.பிக்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க வேண்டும், பொதுமக்களையும் சந்திக்க வேண்டும், அமைச்சர்களுக்கும், எம்.பிக்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கக்கூடாது என்பது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரவை கூட்டத்தில் மோடி அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.