மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்களில் 1% கூட INDIA கூட்டணி செய்யவில்லை- விளாசும் ராஜீவ் சந்திரசேகர்
கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பணக்காரர்களாக உருவாகியுள்ள இவர்கள், மக்களை எப்போதும் ஏழைகளாகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் வைத்திருக்கின்றனர் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த உதயநிதி, காவிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படப்போவதில்லை, வழக்குகளை சந்திக்க தயார் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
தேசிய பணியாக மாற வேண்டும்
இது ஒரு தேசிய பணியாக மாற வேண்டும் - அனைத்து இந்தியர்களும் நமது நாட்டையும் நமது அரசியலையும் இந்த வெட்கமற்ற சுரண்டல் வம்சாவழி குடும்பங்களிலிருந்து காப்பாற்றவேண்டும். கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பணக்காரர்களாக உருவாகியுள்ள இவர்கள், மக்களை எப்போதும் ஏழைகளாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் வைத்திருக்கின்றனர். இந்த வம்சங்கள் உண்மையிலேயே ஒட்டுண்ணிகள், பல தசாப்தங்களாக மக்களின் பாதிப்புகளை வேட்டையாடி, நமது தேசம் மற்றும் மக்களின் செல்வங்களை உறிஞ்சி எடுத்துள்ளனர்.
1% கூட மக்களுக்கான திட்டங்களை செய்யவில்லை
அவர்களின் ஊழல் மற்றும் ஒட்டுண்ணித்தனமான நடத்தைகளை மறைப்பதற்காக,, அவர்கள் "திராவிட நிலத்தைப் பாதுகாத்தல்" போன்ற கதைகளை உருவாக்கி இந்து மத நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பாதுகாக்கும் ஒரே விஷயம் அவர்களின் சொந்த சொத்து மற்றும் அரசியல். அவர்களின் இத்தனை ஆண்டு கால அரசியலில், பிரதமரின் 9 வருட ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 1% செயல்களை கூட UPA மற்றும் I.N.D.I.A செய்யவில்லை என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்