ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமித் ஷா தரிசனம்.. அடுத்து எந்ததெந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் என் மண், என் மக்கள் என்ற பெயரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். 

union home minister amit shah visits ramanathaswamy temple

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் என் மண், என் மக்கள் என்ற பெயரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். நேற்று மாலை யாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். பின்னர், பொதுக்கூட்டத்தை பங்கேற்று விட்டு இரவு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

இதையும் படிங்க;- "தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்கவே இந்த பாதயாத்திரை" - என் மண் என் மக்கள் நிகழ்வில் பேசிய அமித் ஷா!

union home minister amit shah visits ramanathaswamy temple

இதனையடுத்து, இன்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அமித் ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது அமித் ஷா உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன். ராதகிருஷண்ன் ஆகியோர் உடனிருந்தனர். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- "தமிழ் என்ற பெயரால் தமிழனை வஞ்சித்த திராவிடம்" - என் மண் என் மக்கள் விழாவில் பேசிய பாஜக தலைவர் எச். ராஜா!

union home minister amit shah visits ramanathaswamy temple

இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் கட்சி நிர்வாகி வீட்டிற்கு செல்வதாகவும், பின்னர்  காலை 11 மணிக்குத் தங்கும் விடுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறார். பிற்பகல் 12.05 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். இதனையடுத்து, 12.40 மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்துக்குச் செல்கிறார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.20 மணிக்கு மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு சென்ற பிறகு 2.15 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லிக்குக் கிளம்புகிறார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios