Asianet News TamilAsianet News Tamil

நான் நல்லாத்தான் இருக்கேன்.. வதந்தி பரப்பியவர்களை வெட்கித் தலைகுனிய வைத்த அமித் ஷாவின் அறிக்கை

தனது உடல்நிலை குறித்து பரவிய அனைத்து தகவல்களும் வதந்தி எனவும் அதை யாரும் நம்பவேண்டாம் எனவும் தான் நலமுடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 

union home minister amit shah clarifies that he is very healthy and has no issue
Author
Delhi, First Published May 9, 2020, 5:49 PM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 1990 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களாக அவரது துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் கூட கலந்துகொள்ளவில்லையென்றும், ஊடகங்களின் கண்களிலும் படவில்லையென்றும், அதனால் அவரது உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்களை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

அமித் ஷாவின் உடல்நிலை சரியில்லை என்றும் அதுதொடர்பான பல்வேறு ஊகங்களும் தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதுகுறித்து அமித் ஷா தனது மௌனத்தை கலைத்து தெளிவுபடுத்தியுள்ளார். 

union home minister amit shah clarifies that he is very healthy and has no issue

தனது உடல்நிலை குறித்து பரவிய அனைத்து தகவல்களும் வதந்தி என்றும், தான் உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறி அமித் ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை குறித்து சிலர் வதந்தி பரப்பிவருகின்றனர். இன்னும் சிலர் நான் இறக்க வேண்டும் என்று வேண்டி டுவீட்களை செய்துள்ளனர். நாட்டின் உள்துறை அமைச்சராக, கொரோனா தடுப்பு பணிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால், இதுபோன்ற வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை. அவர்களது கற்பனை எண்ணங்களையும் அதனால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தோஷத்தையும் அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் எனது நலம் விரும்பிகளும் கட்சிக்காரர்களும் அந்த வதந்திகளை கண்டு மிகுந்த கவலையடைந்தனர். என் நலனில் அக்கறை கொண்ட நலம் விரும்பிகளின் கவலையை என்னால் புறக்கணித்து கடந்து செல்ல முடியவில்லை. எனவேதான் இந்த விளக்கம். நான் உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே வதந்திகளை நம்பவோ வேண்டாம் என்று அமித் ஷா விளக்கமளித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios