Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம்... கொரோனாவை கட்டுப்படுத்த மினி ஊரடங்கு அமல்படுத்த திட்டம்?

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Union Cabinet meeting chaired by PM Modi... Mini curfew to control the corona
Author
Delhi, First Published Apr 28, 2021, 11:17 AM IST

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 3,50,000-க்கும் மேல் கடந்துள்ளது. தினசரி உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கொரோனவை தடுக்க தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டுமே 31 லட்சத்து 8 ஆயிரத்து 698 பேர் தொற்றினால் பாதித்து இருக்கின்றனர். உலகளவில் வேறு எந்த நாட்டிலும் இந்தளவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது கிடையாது. 

Union Cabinet meeting chaired by PM Modi... Mini curfew to control the coronaஇந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.

Union Cabinet meeting chaired by PM Modi... Mini curfew to control the corona

மேலும் நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மினி ஊரடங்கு போன்று கொண்டு வரலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios