Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணாக்கர்களின் சீருடை மாற்றம்... அசரடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்..!

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Uniform Change of School Students
Author
Tamil Nadu, First Published May 20, 2019, 2:22 PM IST

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.Uniform Change of School Students

அந்த அறிவிப்பில்'' வரும், 2019-20 ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகம் ஆகிறது. புதிய பள்ளிச் சீருடைகள், மாணவ, மாணவியரின் மனதை கவரும் வகையில் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். Uniform Change of School Students

கடந்த ஆண்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை சீருடை மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் 1-8ம் வகுப்பு வரை மாற்றம் செய்யப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை கரும்பச்சை நிற கால் சட்டையும் இளம் பச்சை நிற கோடு போட்ட சட்டையும் வழங்கப்பட இருக்கிறது. Uniform Change of School Students

6 முதல் எட்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு சந்தன நிற கால்சட்டையும், சந்தன நிறத்தில் கோடுபோட்ட மேல் சட்டையும் வழங்கப்பட இருக்கிறது. கூடுதலாக சந்தன நிற கோட்டும் வழங்கப்பட இருக்கிறது. 40 லட்சத்து 66 ஆயிரது 217 மாணவர்களுக்கு இந்த சீருடை வழங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி சீருடை இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை புகழ்ந்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios