கபசுர குடிநீருக்கு இணையான யுனானி மருந்து நாகை அரசு மருத்துவமனையில் விநியோகிக்கப்பட்டு வருவதாக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்,  நாகை தொகுதியில்  நாகூரில் இயங்கும் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு யுனானி மருந்து விநியோகிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

யுனானி மருத்துவர் திருமதி. ரசியா பேகம் அவர்கள் எம்எல்ஏ அலுவலகம் வருகைதந்து, தன்னிடம் சில மருந்து பொட்டலங்களை கையளித்து அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். இது கபசுர குடிநீர் போல் என்றும், மத்திய, மாநில அரசுகளால் இது அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், வாரத்திற்கு இருமுறை இந்த பவுடரை தண்ணீரில் கலந்து பருக வேண்டும் என்றும் கூறினார். பயன்படுத்துவது குறித்த துண்டறிக்கையையும் அதனோடு இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

விலாம்பழம், மாதுளை, இலந்தை உள்ளிட்ட  பழங்களிலிருந்து இப்பவுடர் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நாகை மற்றும் நாகூர் அரசு மருத்துவமனை யுனானி பிரிவில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பவுடர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.