Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு போராட்டம் நியாபகம் இருக்கா? அமித்ஷாவை அல்லு தெறிக்கவிட்ட ஆண்டவர்...

இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக என வீடியோவில் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கமல்.

ulaganayagan released video against Amithsha
Author
Chennai, First Published Sep 16, 2019, 5:26 PM IST

ஜல்லிக்கட்டு போராட்டமென்பது சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது என கமல் ஆவேசமாக கூறியுள்ளார்.

அதில்;  பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுத்தரவே முடியாது என்று பல மாநில மக்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும் கலாச்சாரமும். 1950-ல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை எந்த "ஷா"வோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்ககூடாது.

ஜல்லிக்கட்டு போராட்டம்.. ஒருசிறிய போராட்டம். ஒரு சிறிய வெற்றி.. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால், அது அதைவிட பன்மடங்காக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ தேவையற்றது.

ulaganayagan released video against Amithsha

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளை தவிர. இருப்பினும், நாங்கள் அதை சந்தோஷமாக பாடிக் கொண்டிருக்கிறோம். பாடிக் கொண்டிருப்போம். ஏனெனில் அதை எழுதிய கவிஞர், எல்லா கலாச்சாரத்திற்கும், எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் திகட்டி விடும். தயவு செய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையை ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு.

கமல் தனது வீடியோவில் 1950-ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது, மொழி உரிமை குறித்த சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முடியாது. அவர்கள் அதற்கு கொஞ்ச கூட முயற்சிக்கக் கூடாது. அப்படி நினைத்தால் புரட்சி வெடிக்கும்,  இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது வேறு மாதிரி இருக்கும். அதன் அழுத்தம் வேறு மாதிரி இருக்கும், என்றுள்ளார்.

ulaganayagan released video against Amithsha

இந்த நிலையில் கமலின் ''இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம்.'' என்று கருத்துக்கு காயத்திரி ரகுராம் பதில் அளித்துள்ளார். அதில், நாம் விருந்து சாப்பிட வாழை இழை தேவை. நம்மை ஒன்றாக இணைக்க, ஒரு மொழி தேவை, நம்மை அதுதான் தொடர்பு கொள்ள வைக்கும், இதற்கு அர்த்தம் நாம் நம்முடைய தாய் மொழியை விட்டு செல்ல வேண்டும் என்பது அல்ல. கற்றுக்கொள்வது என்பது திறமை மற்றும் நன்மை பயக்கும், என்றும் காயத்திரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios