திமுக அறிவிப்பின் படி திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் “தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், பிச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் நடக்கும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என அறிவித்திருந்த நிலையில் இன்று காலை ஆண்டிப்பட்டியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். 

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், முன்கூட்டியே தனது ஆரம்பக்கட்ட பிரச்சாரத்தை, ஊராட்சி சபைக் கூட்டங்கள் வாயிலாக ஆரம்பித்துவிட்டது திமுக.

கடந்த 9ஆம் தேதி திருவாரூரில் ஊராட்சி சபைக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், அடுத்தடுத்து திருச்சி, கரூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டக் கூட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தூத்துக்குடி பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கி ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டார். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களில், திமுக முக்கிய தலைவர்கள், மாநில அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக அறிவிப்பின் படி திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் “தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், பிச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தினார். முதல் முதலாக கலந்து கொண்ட உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பிச்சம்பட்டி ஊராட்சி எல்லையான ஆண்டிப்பட்டி முருகன் தியேட்டர் அருகில் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.