மகாராஷ்ட்ராவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக- சிவசேனா கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதலமைச்சர் யார் என்ற விவகாரததில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கரும்மு வேறுபாட்டால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது.

ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அஜித் பவார் அக்கட்சியை உடைத்து பாஜகவுடன் இணைந்து ஆட்சிப் பொறுப்போற்றது. இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு சென்றனர்.

இந்நிலையில் பெரும்பான்மையை நாளைக்குள் நிருபிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே  முதலமைச்சர்  பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். அஜித் பவாரும் ராஜினிமா செய்தார்.

இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கரை இடைக்கால சபாநாயகராக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.

இதனிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தவ் தாக்ரே  கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முதலமைச்சராகவும் போட்டியின்றி தேர்ஙநதெடுக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் 1 ஆம் ஆம் தேதி அவர் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.