திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறையை மேடையில் பகிரங்கமாக மிரட்டியது பத்திரிக்கை, ஊடத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  

இதுகூறித்து பத்திரிக்கையாளர்கள் கூறும்போது, ’’பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் எப்படி இருந்தது என்கிற ஞாபகம் இப்போது வருகிறது. அப்போது தினசரி பத்திரிக்கையை திறந்து பார்த்தால் எத்தனை மணி நேரத்திலிருந்து எத்தனை மணி நேரம் மின்சாரம் தடைபடும் என்கிற அறிவிப்பு வெளிவரும். சென்னையில் 2 மணி நேரம் கிராமங்களில் அதைவிட அதிகம் வாரத்திற்கு ஒரு முறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரத்தடை அப்போது மின்சாரத்தடை மட்டும்தான் பிரச்சினையா என்று பார்த்தால் இல்லை. செய்தித்தாளில் அடுத்த பக்கம் திருப்பி பார்த்தால் திமுக மீது அல்லது திமுக பிரமுகர் கைது காவல்துறையில் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற செய்தி தவறாமல் இடம் பெறும்

.

இப்படி சாமானியன் 10 ஆண்டுகளுக்கு முன்பு சராசரியான வாழ்க்கை வாழ முடியாத நிலைமை இருந்தது என்பது நாம் அனைவரும் அனுபவித்த கசப்பான உண்மை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது வரை நாம் சம்பவம் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும்போது தான் உதயநிதி ஸ்டாலின் ஒரு கனலில் வெளியிட்டு ஆட்சிக்கு வர முன்பே அதிர வைத்துள்ளார். 

அந்த வீடியோவில் ஸ்பெஷல் டிஜிபி ரமேஷ் தாஸ். மற்றும் காவல்துறையினரை அவர் மிரட்டியுள்ளார். ’’எங்களுக்கு தெரியாத காவல்துறையா? நாங்கள் பார்க்காத காவல்துறையா..? என பகிரங்கமாக மிரட்டியுள்ளார். ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் திமுகவின் அக்கிரமங்களையும், அநியாயத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் ஊடகத் துறையினர், பத்திரிக்கையாளரின் நிலைமை என்ன? திமுகவை விமர்சித்த ஒரு பத்திரிக்கை அலுவலகம் அவர்களுக்குச் சொந்தமான அலுவலகம் மதுரையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள்.

அந்த சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். இந்த கொடூரம் தொடர வேண்டுமா? நாளை உங்கள் பிள்ளைகள் இது போன்ற கொடூர சூழலில் வாழ முடியுமா? காவல்துறை அதிகாரிக்கும், ஊடகத்திற்கும், பத்திரிகையாளர்களுக்கும் இதுதான் நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்ன? நீங்கள் சிந்திக்கத் துவங்கினால் இது போன்ற பேச்சுக்களை பேசமாட்டார்கள். இனி வரும் காலங்களில் இதுபோன்ற அநியாயங்கள் நடக்காமல் மக்களாகிய நாம்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’’என கொந்தளிக்கின்றனர்.