Asianet News TamilAsianet News Tamil

அண்ணா இது எனக்கு வேண்டாம்... பள்ளி மாணவியால் அதிர்ந்து வியந்துபோன உதயநிதி..!

ஒரு மாணவி உதயநிதி ஸ்டாலின் கொடுத்த கை அடக்க கணினியை வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இதுக்கு உதயநிதி ஸ்டாலின் எதுக்கு வேண்டாம் என்று சொல்கிறார் என்று கேட்டுள்ளார். இந்த மாணவி கூறுகையில் அண்ணா இந்த கை அடக்க கணினிக்க பதிலாக என்னோட பள்ளிக் கட்டணத்தை செலுத்த உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். 

Udayanidhi was shocked by the school student
Author
Chennai, First Published Jul 18, 2021, 11:39 AM IST

ஏழை - எளிய மாணவ, மாணவிகளின் ஆன்லைன் கல்விக்கு உதவிடும் வகையில் 120 பேருக்கு இலவச கை அடக்க கணினியை உதயநிதி வழங்கப்பட்ட போது ஒரு சுவாஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் ஆவடி சா.மு.நாசரும், அதிமுக சார்பில் பாண்டியராஜனும் போட்டியிட்டனர். இதில், ஆவடி நாசர் சுமார் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது பால்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், நேற்று ஆவடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி அந்த தொகுதியில் உள்ள 120 பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறைக்கு உதவும் வகையில் கை அடக்க கணினி வழங்கப்பட்டது. 

Udayanidhi was shocked by the school student

அந்த சமயத்தில் சுவாஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஒரு மாணவி உதயநிதி ஸ்டாலின் கொடுத்த கை அடக்க கணினியை வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இதுக்கு உதயநிதி ஸ்டாலின் எதுக்கு வேண்டாம் என்று சொல்கிறார் என்று கேட்டுள்ளார். இந்த மாணவி கூறுகையில் அண்ணா இந்த கை அடக்க கணினிக்க பதிலாக என்னோட பள்ளிக் கட்டணத்தை செலுத்த உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். 

Udayanidhi was shocked by the school student

இதற்கு உதயநிதி ஸ்டாலின் முதலில் கை அடக்க கணினி வாங்கிக்கொள். கண்டிப்பாக உன்னோட பள்ளிக் கட்டணத்தை செல்லுவதற்கு உதவி செய்கிறேன் என்று கூறிவிட்டு, அந்த பள்ளி மாணவியின் விவரத்தை கேட்டுக்கொண்டு அனுப்பியுள்ளார். சொன்னதை போல கூடிய விரைவில் உதயநிதி ஸ்டாலின் அந்த மாணவியின் கல்விக்கட்டணத்தை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios