வாசிப்பும், எழுத்தும் கருணாநிதி குடும்பத்திற்கு ஆகச்சிறந்ததாய் வாய்க்கப்பெற்றது தான். அது கருணாநிதி, கனிமொழியோடு முடிந்து போகும் என நினைத்தால் உதயநிதி தனது அப்பாவை விட இந்த விஷயத்தில் முன்னுக்கு வந்து நிர்கிறார். ஆம் அவர் பகிர்ந்துள்ள ஒரு விஷயம் அவருக்கும் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கிறது.

’’எஸ்.கே.பி.கருணா அவர்களின் பண்பலை பேட்டி ஒன்றின் வழியாக அறிமுகமானது அவரின் ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’என்ற நூல். ‘படிக்கணும்னு ஆவலா இருக்கேன். அனுப்பிவிடுங்க’என்றதும் உடனடியாக அனுப்பி வைத்தார். அவர் வாழ்வின் சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல். படித்துவிட்டேன்.

 

ராங் நம்பர் வழிவந்த பாட்டியின் அன்பு, சுஜாதாவின் ஆட்டோகிராஃப்…என ஒவ்வொரு கட்டுரையிலும் குசும்பு. வழுக்கிச் செல்வதுபோல் எளிய எழுத்துநடை. வாழ்வை அதன்போக்கில் ரசித்து வாழ்பவர்களுக்கே இப்படியான எழுத்து கைவரும். தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.’’ எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி. இந்த தகவலை அறிந்தவர்கள், தலைவர் மகனுக்கு வாசிக்கும் பழக்கம் எல்லாம் இருக்கிறதா? ஆச்சர்யமாக இருக்கிறதே. பரவாயில்லை’’என சிலாகிக்கிறார்கள்.