சமீபத்தில் கனிமொழியின் மாமியார் இறந்துவிட்டதால் அவருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்த நிலையில் திமுக சார்பாக யாரும் இறுதி அஞ்சலிக்கு செல்லாத நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழிக்காக ஒரு புது திட்டம் வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் இளைஞரணி தலைவராக உதயநிதியை பதவியில் அமர்த்தியத்தால் கனிமொழிக்கு சற்று அதிருப்தி நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அத்தையை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஏதாவது முக்கிய பொறுப்பை வழங்க உதயா திட்டமிட்டு வருகிறாராம். அதன் முன்னோட்டமாக தான் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கனிமொழியின் மாமியார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திமுக வரலாற்றைப் பொறுத்தவரையில் இதற்கு முன்னதாக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளின் ரத்த உறவுகளுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனிமொழியின் மாமியார் சுசீலா கோவிந்தசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் மூலம் கனிமொழிக்காக ஏதோ ஒரு புது திட்டம் வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக கலைஞரின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த மம்தாபானர்ஜியை வரவேற்பதற்காக கனிமொழியை தவிர்த்து உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்தார் ஸ்டாலின். 

இதேபோன்று நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் கனிமொழிக்கு மாறாக ஆர் எஸ் பாரதி அனுப்பிவைத்தார். இவ்வாறு தொடர்ந்து ஒரு சில விஷயங்களில் கனிமொழியை ஓரங்கட்டி வந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழியை ஓரங்கட்டி வந்தார்.ஆனால் திமுக இளைஞரணி தலைவரான உதயா கனிமொழிக்கென தனி பிளான் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.