யாருக்கு..? எங்கே..? மாலையிடுகிறார் உதயநிதி தெரிகிறதா ..?அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..! 

திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

உதயநிதியை பொருத்தவரை ஒரு நடிகராக மக்கள் மத்தியில் நன்கு பதிந்திருந்தாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதற்கு பெரும் பாடு பட்டவர் உதயநிதி என்று கூட சொல்லும் அளவிற்கு பல்வேறு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்.

அதன்பின் தமிழகத்தில் நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை பிடித்தது திமுக. அதன் பின்னர் திமுக இளைஞரணி செயலாளராக முக்கிய பொறுப்பையும் உதயநிதிக்கு வழங்கப்பட்டது. பதவி ஏற்ற நாள் முதல் இதுநாள் வரை தொடர்ந்து கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிலையில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட இடமான திருப்பூர் ரயில் நிலையத்தின் அருகே, அவர்களின் சந்திப்பின் நினைவாக   அமைக்கப்பட்டுள்ள இருவரின் சிலைக்கு மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது...

உதயநிதி ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் உறுதுணையாக அவருடன் இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பது குறிப்பிடத்தக்கது.