Asianet News TamilAsianet News Tamil

அன்பகத்தில் உதயநிதி நிகழ்த்திய அதிரடி மாற்றம்... நெஞ்சம் நெகிழும் உடன்பிறப்புகள்..!

அன்பகத்தில்  இளைஞரணி செயலாளர் உதயநிதி செய்த அதிரடி மாற்றத்தால் உடன்பிறப்புகளும், மாற்றுத்திறனாளிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Udayanidhi's love in action
Author
Tamil Nadu, First Published Jan 20, 2020, 3:31 PM IST

கடந்த நவம்பர் மாதம் அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி வீல்சேர் மூலம் ஏறும்போது தலைகீழாய் விழுந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியரும், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும்,  மாற்றுத்திறனாளி ஆர்வலருமான தீபக்நாதன்,’’இப்படிப்பட்ட அபாயகரமான பேருந்தை எங்களுக்கு தர ஏன் முயற்சிக்கிறீர்கள் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்களே? மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த பேருந்து உண்மையிலேயே வசதியாக உள்ளதா..?

Udayanidhi's love in action

தெற்கு ரயில்வே ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஊனமில்லாதவர்கள் ஏறிக்கொண்டு பயணிக்கின்றனர். ஏற்கனவே பல ரயில்களில் ஊனமுற்றோர் பிரத்யேக பெட்டி இல்லை! தென்னக ரயில்வே அதிகாரிகள் எங்களை அழைத்து பேச வேண்டும் இல்லையேல் போராட்டத்தை சந்தியுங்கள்’’ என ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். 

Udayanidhi's love in action

இந்நிலையில் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் சாய் தளம் அமைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின், இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’பேராசிரியர் தீபக் நாதன் அவர்களுக்கு நன்றி. சிரமத்திற்கு வருந்துகிறேன். மாற்றுத்திறனாளி தோழர்கள் அரங்கம், மேடைக்குச் செல்ல சாய் தளம், வீல் சேர் போன்ற வசதிகள் அன்பகத்தில் ஏற்கெனவே உள்ளன. இனி, அரங்கத்தை முன்பதிவு செய்ய வருபவர்களிடம் இத்தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ள பலரும்,’’இளைஞரணியின் வேகம் வேகமாக அதிகரிக்க தொடங்கி விட்டது. இதில் தலைவர் தளபதியை  தாண்டி உழைக்கவும் வெற்றி பெறவும் செய்தால் வங்க கடலோரம் உறங்கும் கலைஞரின் எண்ணம் முழுவதும் நிறைவேறும்’’எனக் கூறி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios