திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்ற இரண்டே நாட்களில் மாவட்ட நிர்வாகி ஒருவரின் பதவியை பறித்து அதிரடி ஆட்டத்தை தொடங்கி விட்டார் உதயநிதி.

நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் திமுக நிர்வாகிகள் பற்றி பலரும் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிர்வாக வசதிகளுக்காக உதயநிதி பழைய நடவடிக்கைகளில் இருந்து புதிய செயல்பாட்டை கொண்டு வர இருப்பதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் அதன் முதல் கட்டமாக நாகை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜி.ராம்குமார் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்த அவரது அறிவிப்பில், ‘’ ஜி.ராம்குமார்  தொடந்து கழகப்பணிகளில் ஈடுபாடு இல்லாமல் வெளியூரில் உள்ளதாக அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞர் அணி துணை அபைப்பாளராக பணியாற்றி வரும் நாகை மாவ்வட்டத்தை சேர்ந்த திருக்குவளை மலர் வண்ணனை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி ந்ர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்’’ என உதயநிதி அறிவித்துள்ளார்.