திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கருத்து தொிவித்திருப்பது தொண்டா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கருணாநிதி உயிரோடு இருக்கும் போது நடிகராக வலம் வந்த உதயநிதி மதுரையில் பத்திாிகையாளா்கள் சந்திப்பில், ”நீங்கள் அரசியலுக்கு வருவீா்களா? என்று கேட்டதற்கு எனக்கு நடிப்பு தான் முக்கியம், எனக்கு அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை. நான் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன் என்று தீர்க்கமாக சொன்னார் உதயநிதி. ஆனால் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவில் ஏற்பட்ட மாற்றத்தால் உதயநிதிக்கு இளைஞா் அணி செயலாளா் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறார் அவரது அப்பா மு.க.ஸ்டாலின்.

 

இந்நிலையில் உதயநிதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தற்போது கட்சி தொண்டா்களிடையே அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.  சென்னை வானகரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய அவர்இ மணமக்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று கூறினார். எது வேண்டுமோ அதை உரிமையுடன் கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் திமுகவில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டார். திமுகவில் சாதாரண தொண்டர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்காது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் உழைப்பவா்களுக்கு பதவி உயா்வு உண்டு என்று உதயநிதி பேசியிருக்கிறாா். இதுகுறித்து திமுக தொண்டா்கள் பேசும் போது, ’’திமுகவை வளா்த்ததே அடிமட்ட தொண்டா்கள்தான். அப்படிப்பட்ட தொண்டா்கள் இன்றைக்கும் அடிமட்ட தொண்டா்களாகவே இருக்கிறாா்கள். எந்த அடிமட்ட தொண்டனாவது எம்.எல்.ஏ., எம்.பி., ஏன் மாவட்டச்செயலாளராக ஆகியிருக்கிறாா்களா? எல்லாம் பணம் சாதி பலம் இந்த இரண்டையும் பாா்த்து தான் திமுக இயங்கி கொண்டிருக்கிறது. மாற்றுக்கட்சியில் இருந்து தாவி வருபவர்களுக்கு பெரும்பதவியை கொடுத்து தூண்டில் விரிக்கும் வித்தை காட்டுகிறது தலைமை. அடுத்து குறுநில மன்னர்களாக கோலோச்சும் சீனியர்களின் வாரிசுகளை எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆக்கி அடிமட்ட தொண்டர்களின் வயிற்றில் அடிப்பது கருணாநிதி காலம் தொட்டு உதயநிதி வரை தொடர்கிறது. 

இவ்வளவு ஏன்..? உதயநிதியுடன் வலம் வருபவர்கள் எல்லாம் வாரிசு அரசியல்வாதிகள் தான். அவருடன் அரசியல்வாரிசுகளான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, கவுதமசிகாமணி ஆகியோர்தான் வலம் வருகிறார்கள். அவர்களை தாண்டி உதயநிதியை சந்திக்க முடிவதில்லை. இதையெல்லாம் அறிந்து கொண்டே உ.பிகளுக்கு நிலாச்சோறு ஊட்டுகிறார் உதய்.

எந்த தொகுதியில் மெஜாாிட்டி சாதி வாக்காளா்கள் இருக்கிறாா்களோ அங்கே மைனாாிட்டி சமுகத்தைச் சோ்ந்தவா்களை தோ்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமையெல்லாம் ஜெயலலிதாவக்கு மட்டுமே சேரும் என்கிறாா்கள் திமுகவினா்!

-தெ.பாலமுருகன்