ஜெயராஜ், பென்னிக்ஸ் விவராகரத்தை ஆறப்போடுவோம் அமைதியாகி விடுவார்கள் என நினைக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,. ‘’ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள்’என நினைக்காதீர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே. அந்த குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தவறிழைக்க நினைப்பவர்களை எச்சரிக்கும் வகையிலும் உங்களின் நடவடிக்கைகள் அமையும் என நம்புகிறோம்.

ரூ.1950 கோடி செலவில் 12,524 கிராமங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தர கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. திமுகவும் வழக்கு தொடர்ந்தது. எடப்பாடி அரசின் விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு டெண்டரை ரத்து செய்துள்ளது. கரடியே காறித்துப்பிய மொமன்ட்!

‘கேன்சல் பண்ணிட்டீங்கள்ல, மறு டெண்டர் விட்டுக்குறோம்’என இதை எளிதில் கடந்துபோகவிடக்கூடாது. முறைகேட்டுக்கு காரணமான அமைச்சர், அதிகாரி, நீதிமன்றத்தில் ‘முகாந்திரம் இல்லை’ என்ற லஞ்ச ஒழிப்புத்துறை.. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே மறுடெண்டர் குறித்து முடிவு செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.