மதுரை எய்ம்ஸ்-க்கு கொடுத்த செங்கலை திருடியுள்ளார் உதயநிதி… அண்ணாமலை விமர்சனம்!!
அமைச்சர் உதயநிதிக்கு செங்கலை பார்சல் அனுப்ப போகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதிக்கு செங்கலை பார்சல் அனுப்ப போகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, தேமுக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா ஆகியோர் மிக தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 30 திமுக அமைச்சர்களை எதிர்த்து தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
சீப்பை ஒழித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுபோய்விடும் என்று பழமொழி சொல்வார்கள். ஆனால் வாக்காளர்கள் ஒழித்து வைப்பதால், அதிமுக - பாஜகவின் கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது. திமுக ஆட்சியமைத்த 22 மாதங்கள், தமிழ்நாட்டின் இருண்ட காலமாக மாறியுள்ளது. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 கொடுத்திருந்தால், தற்போது ரூ.22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதேபோல் கேஸ் சிலிண்டர் மானியம் இதுவரை அளிக்கப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் கட்ட கொடுக்கப்பட்ட செங்கலை உதயநிதி எடுத்துக்கொண்டு சுற்றுகிறார்.
இதையும் படிங்க: டெல்லி ஜே.என்.யூ பல்கலை.,யில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்... வைகோ கண்டனம்!!
நான் வைத்திருக்கும் செங்கல் அதுவல்ல. தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்ட இதுபோல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் கொடுத்துள்ளோம். 11 மருத்துவ கல்லூரியில் 1800 மருத்துவ சீட்டில் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிக்க காரணமாக இருப்பது நான் வைத்திருக்கும் செங்கல். இதனை அமைச்சர் உதயநிதிக்கு பார்சல் அனுப்ப போகிறேன். திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கட்சிகளை அடமானம் வைத்துவிட்டார்கள். மக்களிடம் வாக்கு கேட்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ, கனிமொழிக்கோ எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.