சமீபகாலமாக இந்திய சினிமாவில் அரசியல்வாதிகளை மையப்படுத்தி வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு, அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள்தான் சர்ச்சையை கிளப்பி ரிலீஸ் ஆகின்றது. 

இந்த வகையில் மோடி, மன்மோகன் சிங் உள்ளிட்டோரின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமா தற்போது உருவாகி வருகின்றது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சராக இருந்து மறைந்த கருணாநிதியின் வாழ்க்கையையும் படமாக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுவருகின்றது.

இந்த படத்தினை இயக்குனர் ராம் சிவா இயக்குகிறார். அவர் கலைஞராக உதயநிதி ஸ்டாலினை நடிக்கவைக்க ஆசைப்படுவதாகவும், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

‘அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்த கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் படத்தில் கலைஞராக அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இது குறித்து அவரிடம் நேர ஒதுக்கீடு பெற்று கட்டாயம் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்படும்’ என்று இயக்குனர் ராம்சிவா கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் சந்தானம் காமெடி இடம்பெற்ற படங்கள் மட்டுமே நகைச்சுவைக்காக வெற்றி பெற்றது. மற்ற படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் சிரமமப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மு.க.கருணாநிதி கதாபாத்திரத்துக்கு பொருந்துவாரா என உடன்பிறப்புகள் நெழிந்து வருகின்றனர்.