கல்வெட்டில் விடுபட்ட அமைச்சர் பெயர்; அதிகாரிகளை தூக்கி அடித்த நிர்வாகம்
திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், குழாய் திறப்பு குறித்து அமைக்கப்பட்ட கல்வெட்டில் அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் இடம் பெறாத நிலையில், அலட்சியமாக பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் திறக்கப்பட்டது. குடிநீர் குழாய் திறப்பின் போது அமைக்கப்பட்ட கல்வெட்டில் நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர் இடம் பெற்றிருந்தது.
Holiday List 2023; 2023ம் ஆண்டுக்கான அரசு, வங்கி விடுமுறை லிஸ்ட்; ஜனவரியில் மட்டும் 6 நாள் லீவு
ஒரே பகுதியைச் சேர்ந்த இரு அமைச்சர்களில் ஒருவரது பெயர் மட்டும் கல்வெட்டில் இடம் பெற்றதால் நேருவின் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் நகராட்சித் துறை அமைச்சர் நேருவின் பெயர் விடுபட மணப்பாறை நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்தி, பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ராஜேஸ் தான் காரணம் என்று தெரியவந்தது.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,12,000 சம்பளத்தில் வேலை
அதிகாரிகளின் அலட்சியப் போக்கைத் தொடர்ந்து ராஜேஷ் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கும், விஜய்கார்த்தி நாகப்பட்டினம் நகராட்சிக்கும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதிகாரிகளின் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து உள்ளூர் திமுக நிர்வாகிகள் சமாதானமடைந்தனர்.