கருணாநிதிக்கு முன்பே அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவர் க.அன்பழகன். அதுவும் முதன்மை இடத்தைவிட இரண்டாம் இடத்தையே அதிகம் விரும்பியவராகவும் இருந்தவர். 

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆா். வெளியேற்றப்பட்டு, அதிமுகவைத் தொடங்கிய பிறகு, அவர் வகித்த பொருளாளர் பதவி க.அன்பழகனுக்குக் கொடுக்கப்பட்டது. 1977-ம் ஆண்டு திமுகவிலிருந்து நெடுஞ்செழியன் விலகிய பிறகு அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவி க.அன்பழகனுக்குக் கொடுக்கப்பட்டது. திமுகவில் இரண்டாம் இடத்துக்குரிய இந்தப் பதவியில் 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்தவர். ஆனாலும், கருணாநிதியும், அன்பழகனும் எப்போதும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஒன்றாகவே இருந்து வந்தனர். 

மேலும், நான் கழகத்தின் தலைவர் அவர் பொதுச்செயலாளர் இருவரும் கலந்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கழக சட்டதிட்டம். எங்களுக்கு விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து இருந்தாலும் நாங்கள் இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகள் எடுத்திட தலைமை நிர்வாகக் குழுவையோ, செயற்குழு, பொதுக்குழுக்களையோதான் கூட்டுகிறோம். எங்கள் உறவை வெட்டி முறித்திடக் கூட வீணர்கள் எண்ணிணர்கள்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் நாங்கள் என்பதை எங்கள் சகோதரப் பாசத்தின் வாயிலாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல, தமிழ் இனமும் நாடும் வாழ இந்தக் கழகம் வாழ்வேண்டும் என்று நாங்கள் வாழும் வரையிலும் இணைந்து நின்றே இலட்சியப் பயணம் வகுத்திடுவோம்.