தெலங்கானா ஆளுநராக கடந்த 8ம் தேதி பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன். அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடப் போவதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். அடுத்து மக்களுக்கு உரையாற்றுகையில் தெலுங்கில் உரையாற்றினார்.

 

இந்த நிலையில் அவர் சொன்னதை நிரூபிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கில் ட்விட் போட ஆரம்பித்து இருக்கிறார் தமிழிசை. ’’கோதாவரி படகு விபத்தில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி தெலுங்கில் பதிவிட்டுள்ளார். 

அதே போல் இன்று டெல்லியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார். அப்போது வெங்கய்யா நாயுடுவின் மனைவி உஷா நாயுடு அவரை வரவேற்றார். அந்த நிகழ்வையும் தெலுங்கில் பதிவு செய்துள்ளார் தமிழிசை. ஹிந்தி மொழியை இந்தியா முழுவதும் கொண்டு வர பாஜக முயற்சித்து வரும் நிலையில், தமிழிசை தெலுங்கில் ட்விட் போட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். 

 

அதில், தமிழிசை இன்று முதல் தெழுங்கிசை என்று அன்போடு அழைப்போம். தெலுங்கிசை செளந்தராஜன். தமிழில் இனி ட்வீட் போட மாட்டிங்களா..??’’ என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.