Asianet News TamilAsianet News Tamil

ஊழல் அதிகாரிகள் சஸ்பென்ட்.சாட்டையை சுழற்றிய தூத்துக்குடி மாநகாராட்சி ஆணையர்..!

மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் முறைகேடு செய்ததாக தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேரை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
Tuticorin Corporation Commissioner who scammed corrupt officials
Author
Thoothukudi, First Published Jun 6, 2020, 7:33 PM IST

மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் முறைகேடு செய்ததாக தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேரை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tuticorin Corporation Commissioner who scammed corrupt officials

தூத்துக்குடி மாநகராட்சியில் நிர்வாக அலுவலர் பொறுப்பில் இருந்தவர் பாலசுந்தரம், இளநிலை உதவியாளராக இருந்தவர் சுமித்ரா, இருவர் மீதும் மாநகராட்சி மார்கெட் மற்றும் தனியாருக்கு சொந்தமான கடைகளில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், வரியை குறைத்து நிர்ணயித்து மோசடியில் ஈடுபட்டது, வசூலான வரி பணத்தை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்தது என பல்வேறு புகார்கள் வந்தது. அது பற்றி விசாரனை செய்த மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், விசாரனையின் முடிவில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

Tuticorin Corporation Commissioner who scammed corrupt officials
இது போன்ற நடவடிக்கை தமிழ்நாட்டில் உள்ள மதுரை திருச்சி சென்னை கோயம்புத்தூர் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி நகராட்சிகளிலும் சரியானபடி விசாரணை செய்தாலே பல ஆயிரக்கணக்கான கோடி ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடிக்க முடியும்.
எந்த நடவடிக்கையும் இல்லாததால் அதிகாரிகள் உடந்தையோடு செயல்படுவதால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஊழல்களும் வெளிவருவதில்லை. மாநகராட்சி கமிசனர்கள் சரியாக தன்னுடைய அதிகார சாட்டையை சுழற்றினாலே ஒவ்வொரு மாநகராட்சியும் தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios