கொடநாடு கொலை, கொள்ளையில் திடீர் திருப்பம்.. எடப்பாடி, ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் உறவினர்கள் அதிரடியாக கைது..!

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா கார்  ஓட்டுநர் கனராஜின் அண்ணனும், அவருடைய உறவினரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனார். 
 

Turning poing in Kodanadu murder and robbery .. Kanagaraj relatives from Edappadi and Athur arrested ..!

கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொள்ளைச் சம்பவம், அதைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் தொடர்பாக, மறு விசாரணையை போலீஸார் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு பங்களாவில் பணியாற்றிய கணினி ஆபரேட்டர் தினேஷ்குமாரின் தற்கொலை ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதா அல்லது திட்டமிட்ட சதியா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக இதுவரை 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.Turning poing in Kodanadu murder and robbery .. Kanagaraj relatives from Edappadi and Athur arrested ..!
மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகரும் நேரடியாக விசாரணை நடத்தினார். இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால் என்பவரும், அவருடைய நெருங்கிய உறவினர் சேலம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் என்பரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொடநாடு கொள்ளை, கொலைச் சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே இவர்கள் இருவருக்கும் அந்த விஷயங்கள் தெரிந்திருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே, தடயங்களை அழித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்துள்ளப்பட்டுள்ளது. Turning poing in Kodanadu murder and robbery .. Kanagaraj relatives from Edappadi and Athur arrested ..!
கைதான இருவரையும் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை  நவம்பர் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கனகராஜ் மரண வழக்கில் அவருடைய அண்ணனும் உறவினரும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios