நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும். அதிமுக நாளேடு குறித்து பேசாததற்கு ரஜினியிடம்தாம் விளக்கம் கேட்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘’சோவை ஆளாக்கிய இரண்டு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம். மற்றொருவர் கருணாநிதி. முரசொலியைக் கையில் வைத்திருந்தால் அவர் தி.மு.க-காரர்; துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி.

பத்திரிகைகள் பொய்யை உண்மையாக்காதீர்கள். நடுநிலை பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் மனசாட்சிப்படி மக்களுக்கு செய்திகளைச் சொல்லுங்கள்'' என ரஜினிகாந்த் பேசியிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

அதனைக் கண்டித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‘’முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்’’ என பதிலடி கொடுத்திருந்தார்.

 

சோ துக்ளக் முதல் பத்திரிகையிலேயே இரண்டு கழுதைகள் பத்திரிகையை தின்பது போல் அட்டைப்படத்தை வெளியிட்டார். இவையெல்லாம் அறிவாளிகள் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய நையாண்டியுடன் கூடிய ஒருவகையான sarcastic jokes தான்.முரசொலி படிக்கும் அரை வேக்காடுகளுக்கு அது புரியாது. ரஜினி சொன்னது சரிதான் என பலரும் ரஜினிகாந்துக்கு ஆதரவாக கருத்து கூறி வந்தனர்.

 

இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து, நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும். அதிமுக நாளேடு குறித்து பேசாததற்கு ரஜினியிடம்தாம் விளக்கம் கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.