உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காளையும் கலந்து கொண்டது.

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி நடை பெற்று வருகிறது. 700 காளைகள் 900-க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கடைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் டி.டி.விதினகரன் காளை களத்தில் இறங்கியதும் இருவர் திமிலை பிடித்து அடக்க முயற்சித்தனர். சிறிது தூரம் மட்டுமே அந்தக்காளையை அணித்து சென்ற மாடுபிடி வீரர்களை உலுக்கி விட்டு ஓட்டம் பிடித்தது. திமிறிக்கொண்டு சென்ற அந்த காளை பார்த்து அமமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் டி.டி.வி.தினகரன் காளையான சோழன் போட்டியில் வெற்றி பெற்று ரூ.5000 ரொக்கம் பரிசு பெற்றது. மாலை 5 மணி வரை இடைவிடாது நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முத்தாய்ப்பாக அதிக காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்படும் வீரருக்கு முதல்வர் இபிஎஸ் சார்பில் காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் சார்பில் காரும் வழங்கப்பட உள்ளது.